ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 27 செப்டம்பர் 2018 (13:49 IST)

ஐஸ்வர்யாவை ஆனந்தக்கண்ணீர் விட வைத்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தினமும் இரண்டு விருந்தினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று வரும் முதல் விருந்தினர் சென்றாயன்

பழக்கதோஷத்தில் வீட்டிற்குள் நுழைந்ததும் டாய்லட் சுத்தமாக இருக்கின்றதா? என்று பார்க்கும் சென்றாயன், விதிமுறைகளை மீறி வெளியில் யார் யார் எந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளனர் என்பதை அவிழ்த்துவிடுகிறார். குறிப்பாக ஐஸ்வர்யாவிடம் உனக்கு வெளியில் பெரிய ரசிகர் கூட்டமே இருக்குது என்று கூறி அவரை ஆனந்தக்கண்ணீர் விடவைக்கின்றார்.

மொத்தத்தில் பிக்பாஸ் சொல்லிக்கொடுத்தபடி ஐஸ்வர்யாவை நல்லவராக்க சென்றாயனும் தன்னால் ஆன முயற்சியை எடுத்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா வெளியே வந்தவுடன் அவர் உண்மையான நிலைமையை புரிந்து கொள்ள முடியும்