வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (14:31 IST)

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ்-க்கு 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத நிலையில் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவில் தனது திருமணம் குறித்து மறைமுகமாக பதிவு செய்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி 2 படங்களின் மூலம் பிரபலமானவர் பிரபாஸ் என்பதும் அதன் பின்னர் சலார் உள்பட ஒரு சில படங்களில் நடித்தவர் தற்போது ’கல்கி 2898 ஏடி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் பிரபாஸுடன் அனுஷ்கா ஷெட்டி உட்பட பல நடிகைகள் கிசு கிசுக்கப்பட்ட போதிலும் அவர் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய நபர் நுழைய இருக்கிறார் என்றும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து பிரபாஸ் தனது திருமணம் குறித்து தான் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரலாம் என்றும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 
Edited by Mahendran