ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 மே 2024 (08:05 IST)

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மதுரை மதிச்சியம் என்ற பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மழை காரணமாக அவருடைய வீட்டின் மேல் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே பாலசுப்ரமணியம் சிக்கிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மழை காலத்தில் மழை பெய்யும் நேரத்தில் ஆபத்தான இடங்களில் தங்க வேண்டாம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறித்தி உள்ளது.

Edited by Siva