புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:00 IST)

10 கோடி வீடியோக்களை நீக்கிய டிக்டாக்!

டிக்டாக் நிறுவனம் விதிமுறைகளை மீறியதாக சொல்லி 10 கோடி வீடியோக்களை அழித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் காரணங்களுக்காக இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இப்போது எப்படியாவது எல்லா நாடுகளிலும் டிக்டாக்கைக் கொண்டுவர வேண்டும் என சீன நிறுவனமான பைட்டான்ஸ் உறுதியாக உள்ளது.

இதற்கிடையில் டிக்டாக் இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மற்றும் சேவை விதிமுறைகளை மீறியதாக உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட வீடியோக்களை டெலிட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீத வீடியோக்களை பார்வையாளர்கள் பார்க்கும் முன்னரே டெலிட் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.