செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:12 IST)

4 பந்துகளில் 4 விக்கெட்… சிலிர்க்க வைக்கும் வீடியோ! இப்படி ஒரு பவுலரா?

இங்கிலாந்து நாட்டில் இந்தக் கொரொனா காலத்திலும் வைட்டாலிட்டி ப்ளார்ட்ஸ் டி 20 என்ற தொடர் நடைபெற்று வருகிறது.

ஹாம்ப்ஷயர் மற்றும் மிடிசெக்ஸ் ஆகிய இரண்டு அணிகள் நேற்று மோதின. ஆரம்பரம் முதலே கடுமையாக இரு அணிகளும் டஃப் கொடுத்தன.

இதில் ஹாம்ப்ஷயர் அணி 20 ஓவர்களின் முடிவில் 141-9 ரன்கள் எடுத்தனர். இரண்டாவது இன்னிக்ஸில் களமிறங்கி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மிடில்செக்ஸ் அணி வெற்றி பெரும் நிலையில் இருந்தது.

ஆனால் 18 வது ஓவரில் அந்த அணியின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சுகீன் அஃபிடி தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

தில் மிடில்செக்ஸ் அணி 121 ரன்களுகு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஹாம்ப்ஷய் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஃப்ரிடி  6 விக்கெட் எடுத்து 19 ரன்கள் விட்டுக்கொடுத்து தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவிவித்து வருகின்றனர்.