திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (12:12 IST)

யோகி பாபு, இனியா நடிப்பில் உருவான தூக்குதுரை ஓடிடியில் ரிலீஸ் ஆனது!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத்,அரவிந்த் ஆகியோரது தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கி யோகி பாபு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது"தூக்குதுரை" . இந்த படத்தில் யோகி பாபுவோடு இனியா, பால சரவணன்,மகேஷ், சென்ராயன், அஸ்வின், ராஜேந்திரன் உட்பட மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதாநாயகி இனியா ஒரு அரச குடும்பத்தின் வம்சாவளியை சார்ந்தவர் அதே சமயம் ,யோகி பாபு ஊர் திருவிழாக்களில்  ப்ரொஜெக்டர் மூலம் இயக்கும் திரைப்பட ஆபரேட்டராகக் பணிபுரிந்து வருகிறார் ஜமீன்தார் பெண்ணான இனியா, யோகிபாபுவை காதலிக்கிறார். அவர்களின் காதல் ஹாரர் கதையாக மாறி பேய்க் கதையாக மாறி ஒரு த்ரில்லர் படமாக அமைந்தது.

திரையரங்கில் வெளியான போது பெரியளவில் கவனம் ஈர்க்காத இந்த திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படம் ஓடிடி ஆடியன்ஸைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.