வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (14:59 IST)

ஆ.ராசா மனநிலை பாதிக்கப்பட்டவர்: உத்தவ் தாக்கரே கட்சி கடும் விமர்சனம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று உத்தவ் தாக்கரே கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது 
 
சமீபத்தில் ஆ ராசா கூட்டம் ஒன்றில் பேசியபோது இந்தியா என்பது ஒரு நாடே கிடையாது என்றும் துணை கண்டம் என்றும் பேசியதோடு ராமர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் 
 
இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது உத்தவ் தாக்கரே சிவசேனாவும் ஆராசாவின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது 
 
ஒரு முட்டாள் ராமரை பற்றிய அறியவில்லை என்றால் அவருக்கு ஞானம் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன், ராமர் தன்னை பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு தெளிவுபடுத்தட்டும், ஆ ராஜாவின் கருத்து இந்தியா கூட்டணி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார் 
 
மேலும் ஆ ராஜா போன்றவர்களுக்கு எந்த விதமான அறிவும் இல்லை என்றும் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களுக்கு சரியான சிகிச்சை கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் தமிழ்நாட்டில் மருத்துவமனை இல்லாவிட்டால் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தவ் கட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran