வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2024 (11:55 IST)

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 பிக் பாஸ் நிகழ்ச்சிகள் இதுவரை ரவீந்திர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் ஆகியுள்ள நிலையில், இந்த வாரம் சுனிதா வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் சுனிதா குறைந்த வாக்குகளை வாங்கியதை அடுத்து, அவர் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் சிவக்குமார், மஞ்சள், ராயன், ராணவ், நாகப்பிரியா வர்ஷினி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே வந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

பார்வையாளர்களின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க, வைல்டு கார்டு மூலம் ஆறு போட்டியாளர்கள் வந்த நிலையில், புதிதாக வந்த போட்டியாளர்களுக்கும் ஏற்கனவே உள்ள போட்டியாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Siva