வருமானவரி சோதனை… இந்த வாரம் ரிலீஸ் ஆக இருந்த படங்களின் நிலை?
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டு நாட்களாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
திரைப்பட பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன், பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட திரை உலக பிரபலங்கள் வீடுகளில் நேற்று வருமானவரித் துறை அதிரடியாக சோதனை செய்தது.
இந்த சோதனையை தற்போது இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புச்செழியன், தாணு, ஞானவேல் ராஜா உள்பட சுமார் 20 திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் நாளையும் இந்த ரெய்ட் தொடரலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த வாரம் வெளியாக இருந்த சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக ஞானவேல் ராஜாவின் காட்டேரி படமும் அடங்கும் என சொல்லப்படுகிறது.