1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:06 IST)

திரை பிரபலங்களின் வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை: என்னென்ன சிக்கியது?

income tax raid
திரைப்பட பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன், பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்பட திரை உலக பிரபலங்கள் வீடுகளில் நேற்று வருமானவரித் துறை அதிரடியாக சோதனை செய்தது
 
இந்த சோதனையை தற்போது இரண்டாவது நாளாகவும் சோதனை தொடர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புச்செழியன், தாணு, ஞானவேல் ராஜா உள்பட சுமார் 20 திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது
 
இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒரு சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் இன்று 2வது நாளாக தொடரும் சோதனை இரவு வரை நீடிக்கும் என்றும் அதன்பிறகு என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது குறித்த தகவலை வருமான வரித்துறை தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
முன்னணி திரையுலக பிரமுகர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது