வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (12:03 IST)

சத்யஜோதி பிலிம்ஸில் ரெய்டு: அடுத்தடுத்த அதிரடி!!

தயாரிப்பாளர் தாணு வீட்டில் நடந்து வரும் வருமாவரித்துறையின் ரெய்டை தொடர்ந்து மேலும் ஒரு தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்ட்.  


சினிமா  தயாரிப்பாளரும், பைனான்சியரான அன்பு செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக சினிமா படங்கள் பல தயாரித்துள்ளார். பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ரெய்டு சம்பவம் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மேலும் பல சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கலாம் என பேசிக் கொள்ளப்பட்டது. இதற்கு ஏற்ப ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரின் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தியாகராஜன் அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது. இது கோலிவுட் தயாப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.