அடேங்கப்பா! பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா?
இந்தி நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணத்தில் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 1–ந் தேதி ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது.
அரசு குடும்பத்து திருமணம்போல் தனக்கு நடக்க வேண்டும் என்பது பிரியங்கா சோப்ராவின் கனவு. இதற்காகவே இந்த அரண்மனையை தேர்வு செய்துள்ளார். திருமண விழாவை 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஜோத்பூர் அரண்மனையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், இவர்களின் திருமணம் நடக்கவுள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையின் ஒரு நாள் வாடகையே 60 ஆயிரம் அமெரிக்க டாலராம், இதன் இந்திய மதிப்பு ரூ.43 லட்சம்..!