1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (10:24 IST)

திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.  இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள் 
 
கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஜோத்பூரில் அடுத்த மாதம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறுகிறார். 
 
இதற்காக அங்குள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர வீடு ஒன்றை, நிக் ஜோன்ஸ் விலைக்கு வாங்கி உள்ளார். திருமணத்தை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பதிவு செய்ய உள்ளார் பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் திருமண உரிமை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை இருவரும் சமர்ப்பித்து உள்ளனர். 
 
இந்த நிலையில் திருமண புகைப்படங்களை பிரபல நிறுவனம் ஒன்று 2.5 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய பண மதிப்பில் சுமார் ரூ.18.25 கோடி ஆகும்.