வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (18:04 IST)

பிரியங்கா சோப்ராவின் "இஸ் நாட் இட் ரொமான்டிக்" டிரெய்லர்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் படமான "இஸ் நாட் இட் ரொமான்டிக்" படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து உலகம் முழுக்க பிரபலமானார். அதன் காரணமாக பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார்.
 
தற்போது வார்னர் புரோஸ் பிக்சர்ஸ் "இஸ் நாட் இட் ரொமான்டிக்" என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். யோகா தூதராக பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரிபேல் வில்சன், லையம ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் நடித்துள்ளார் காமெடி கதையில், ரொமன்ஸை கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளது டிரெய்லரில் தெரிகிறது. குண்டான பெண்ணுக்க நடக்கும் பிரச்னையே படத்தின் கதையாகும்.
 
"இஸ் நாட் இட் ரொமான்டிக்" படத்துக்கு. எரின் கார்டில்லோ, டானா போக்ஸ் ஆகியோர் கதை திரைக்கதை எழுதியுள்ளனர். டோட் ஸ்ட்ராஸ், ஸ்குல்சன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். 
 
இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.