புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 24 நவம்பர் 2018 (10:46 IST)

என்னடா இது சூப்பர் ஸ்டார் படத்துக்கு வந்த சோதனை!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள   2.0, வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.
 
இந்த படம் தெலுங்கில் 72 கோடிக்கும், ஹிந்தியில் 80 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளுக்கும் சேர்த்து சாட்டிலைட் ரைட்ஸ் 110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. கேரளாவில் 10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
 
ஆனால் மற்ற இடங்களில் இன்னும் விற்பனையாகவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் இவர்கள் சொல்லும் தொகைக்கு இப்படத்தை எந்த விநியோகஸ்தர்களும் வாங்க முன்வரவில்லையாம்.
 
இதனால் வேறுவழியின்றி லைகா நிறுவனமே தமிழகமெங்கும் 2.o படத்தை ரிலிஸ் செய்கிறதாம்.   என்னடா இது சூப்பர் ஸ்டார் படத்துக்கு வந்த சோதனை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்