ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:48 IST)

'நீயா 2' வில் நடித்திருப்பது நிஜபாம்பு! திகில் கிளப்பும் இயக்குனர்

1979ல் வெளியாகி மாபெரும் பெரும் வெற்றி பெற்ற படம் 'நீயா'. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நீயா 2' என்ற பெயரில் இயக்குநர் எல்.சுரேஷ் இயக்குகிறார்.
 
இந்த படத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி மற்றும் காத்ரீனா தெரேசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தை 'ஜம்போ சினிமாஸ்' சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
 
'நீயா' படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த 'ஒரே ஜீவன்' பாடலை இந்தப் படத்துக்காக மறுஉருவாக்கம் செய்துள்ளார்கள்.. மேலும், இத்திரைப்படத்தின் மற்ற பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரேவற்பை பெற்றுள்ளன.
 
'நீயா 2' குறித்து இயக்குனர் சுரேஷ் கூறுகையில்,  'நீயா' படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு. அதுபோலவே, 'நீயா 2' விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.  பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடந்தது என தெரித்தார்.