இந்தத் துறைக்கு தனி அமைச்சகம் வேண்டும்…பிரபல நடிகை வேண்டுகோள்
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். , திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையாக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கான விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழ் மருத்துவத்துறைக்கு எனத் தனி அமைச்சகம் அமைக்க வேண்டுமென பிரபல நடிகை காயத்ரி ரகுராம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக கலை இலக்கிய அணித் தலைவர் காயத்ரிக்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர்பக்கத்தில், தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது.
தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்காவிட்டால் யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி மக்களை அச்சுறுத்தலில்@mkstalinஇருந்து காப்பாற்றியது அல்லாமல், தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளின் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு அரசு ஆவண சைய்ய வேண்டும் சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை
@mkstalin ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் . தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் மரியாதைக்குரிய முதல்வரை நான் கேட்டுக் கொள்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.