வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (06:27 IST)

அதிமுக 10,000, திமுக 25,000: அண்ணா சொன்ன பாட்டாளிகள் கட்சி எங்கே? காயத்ரி ரகுராம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன
 
அதிமுக நேற்று காலை விருப்ப மனுவை பெற்றுக் கொள்ள அறிவித்துள்ளதோடு வேட்புமனு ரூபாய் 15,000 கட்டணம் என்று அறிவித்திருந்தது. அதேபோல் திமுகவும் விருப்பமனு செய்ய விரும்புபவர்கள் 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது 
 
இதுகுறித்து பாஜக பிரமுகரும், நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
10 ஆண்டுகளாய் ஆளும்கட்சியாய் இருக்கும் அதிமுக வேட்புமனுவுக்கு 15000/- வாங்குகிறது. 10ஆண்டுகள் எதிர்கட்சியாக இருக்கும் திமுக 25000/- வாங்குகிறது/ இதிலிருந்தே தெரிகிறது எது ஊழல் கட்சியென்று! அண்ணா சொன்ன பாட்டாளிகளின் கட்சி திமுக என்பது காணாமல் போய் மிட்டா மிராசுகளின் கட்சியாகிவிட்டது’ என்று பதிவு செய்துள்ளார்.