1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 2 டிசம்பர் 2017 (12:48 IST)

திருட்டுப்பயலே 2 மற்றும் அண்ணாதுரை படத்தின் வசூல் நிலவரம்

விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'அண்ணாதுரை' திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை, 'பிக்சர் பாக்ஸ் கம்பெனி' என்ற  நிறுவனம் சார்பில் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.இதுவரை விஜய் ஆண்டனி நடித்த  படங்கள் சுமார் 300 தியேட்டர்கள் என்ற அளவிலேயே வெளியானது. முதன்முறையாக அண்ணாதுரை படத்தை 400க்கும்  மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளனர்.
 
சுசி கணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் திருட்டுப் பயலே முதல் பாகம். ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் நடித்திருந்த அந்த படத்தின் கதையை ஒட்டியே உருவாகியிருக்கிறது திருட்டுப் பயலே 2. 
 
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2ல் இருந்து 3 படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தற்போது கடந்த வியாழக்கிழமை திருட்டுப்பயலே 2, அண்ணாதுரை என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு  படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் வசூலிலும் கலக்குகிறது.
 
தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி திருட்டுப்பயலே 2 ரூ. 21 லட்சமும், அண்ணாதுரை ரூ. 24 லட்சமும்  வசூலித்துள்ளது.