வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:45 IST)

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் நிலவரம்

கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இப்படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

 
பருத்தி வீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, இந்த பத்து வருடங்களில் பதினைந்து படங்களில்  மட்டுமே  நடித்துள்ளார். வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்த கார்த்திக்கு, கடைசியாக வெளியான ‘காஷ்மோரா’ மற்றும் ‘காற்று வெளியிடை’ இரண்டு படங்களுமே தோல்விப் படங்களாக அமைந்தன. இந்த நிலையில்‘தீரன் அதிகாரம் ஒன்று’  படம் மூலம் அதிலிருந்து  மீண்டுள்ளார்.
 
தீரன் அதிகாரம் ஒன்று படம் 4 நாள் முடிவில் தமிழிகத்தில் ரூ. 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதில் சென்னையில் மட்டும் ரூ. 2 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீரன் உலகம் முழுவதும் ரூ. 28 கோடி வரை வசூல்  செய்திருக்க வாய்ப்புள்லதாகவும் கூறப்படுகின்றது. கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் அங்கு படம் ரூ. 7.5 கோடி  வரை வசூல் செய்துள்ளாதாம்.