செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (12:29 IST)

வெளியானது “தர்பார்” படப்பிடிப்பு காட்சிகள் - படக்குழுவினர் அதிர்ச்சி

தற்போது நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் தர்பார். நீண்ட வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். கதாநாயகியாக நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.



படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் சிறப்பு தோற்றங்கள் வெளியாவதை தடுக்க பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதையும் மீறி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி விடுகின்றன. ரஜினி போலீஸ் வேடத்தில் நடிப்பதால் அதற்காக பிரத்யேக “போட்டோ ஷூட்” எடுக்கப்பட்டது. அதன் புகைப்படங்கள் எப்படியோ இணையத்தில் கசிந்து வைரலானது. அதன்பிறகு யோகிபாபு, ரஜினிகாந்த கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சியை படமாக்கியபோது அதுவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இப்படியே தொடர்ந்தால் படம் ரிலீச் ஆகும் முன்பே அனைத்து காட்சிகளும் இணையத்தில் வெளியாகிவிடும் என படக்குழுவினர் வேதனையில் இருக்கிறார்கள். எனவே அதிரடியாக படப்பிடிப்பு தளத்தில் உதவி நடிக, நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதித்தனர். பார்வையாளர்களுக்கும் படப்பிடிப்பை பார்க்க தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஒரு நட்சத்திர ஓட்டலின் முன்னால் ரஜின்காந்த் நடந்து வருவது போன்ற காட்சி இணையம் மூலமாக பரவி வைரலாகி வருகிறது. இதனை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.