செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 26 ஜூன் 2021 (12:26 IST)

விஜயகாந்துடன் நான் நடித்த ஒரே படம் - 34 வருடத்திற்கு பிறகு மனம் திறந்த நதியா!

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில் விஜகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள நதியா அந்த புகைப்படம் குறித்த பல நினைவுகளை பகிர்ர்த்துள்ளார். அதாவது, " 1987 வெளியான "பூமழை பொழியுது" படம் தான் விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம். மறைந்த அழகப்பன் இயக்கிய இப்படத்தை புகழ்பெற்ற ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இதுதான் அவரது முதல் தமிழ் திரைப்படமும் கூட.  இப்படம் ஜப்பான் & ஹாங்காங்கில் படமாக்கப்பட்டது. வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்ட எனது முதல் படம் இது தான். என கூறியுள்ளார். விஜயகாந்திற்கு ஜோடியாக நதியா நடித்தது இது ஒரே ஒரு படம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.