செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 ஜூன் 2021 (17:25 IST)

விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மீண்டும் ஒரு புரளி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மீண்டும் ஒரு புரளி உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களாக அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கும் திரையுலக பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வருவது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சற்று முன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் ஒருவர் விஜயகாந்தின் விருகம்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
 
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த், அஜீத், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது