ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

Last Modified வியாழன், 20 செப்டம்பர் 2018 (21:36 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் விஜய் உள்பட ஒருசிலர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டைட்டிலையே அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண் இயக்குனர்

இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆ.பிரியதர்ஷினி என்பவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'தி அயர்ன் லேடி' என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் தற்போது வெளிவந்துள்ளது. போஸ்டரில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன், ஜெயலலிதா குறித்து கூறிய வாசகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேப்பர்டேல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தொடக்கவிழா விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :