செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (19:30 IST)

யானை பலம் கூடுகிறது…. மீண்டும் எழுந்து வருவேன் – கொரொனா பாதித்த இயக்குநர் டுவீட்

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், வெயில், அங்காடித்தெரு, ஜெயில், அரவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அன்புள்ள நண்பர்களுக்கு!  நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை.என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம்  யானை பலம் கூடி வருகிறது.

ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் எனத் தெரிவித்துள்ளார்.