வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (08:45 IST)

வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் 25 பேருடன் சேர்ந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க உள்ளார் வசந்தபாலன். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அவரே இயக்கவும் உள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் கவனத்தை ஈர்த்த நிலையில் அவர் கதாநாயகனாக நடித்த அந்தகாரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெயரிடப்படாத தனது புதிய படத்தின் படப்பிடிப்பை சில நாட்களுக்கு  முன்னதாக அவர் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ள நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதனைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.