டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று 50வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லிமசன் பந்து வீச முடிவு செய்தார்.
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பாண்ட் முதலில் பேட்டிங் செய்தது.அதில், வர்னர் 92 ரன்களும், மார்ஷ் 10 ரன்களும், 26 ரன்களும், பவல் 67 ரன்களும், அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, நிக்கோலஸ் 62 ரன்களும், மார்க்கம் 42 ரன்களும்,திரிப்பதி 22 ரன்களும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்து தோற்றனர். எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசதிதில் வெற்றி பெற்றது.