புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (23:43 IST)

சைகர் கிரைம் போலீஸில் புகார் அளித்த நடிகை !

தமிழ் சின்னத்திரையில்  மிகவும் பிரபலமான நடிகை ஒருவரின் பெயரில்  மர்ம நபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளதை அடுத்து நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துவர் நடிகை ஷாமிலி.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது பெயரில் ஒரு மர்ம போலியான கணக்கு ஒன்றை இன்ஸ்டாகிராமில் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதில், நடிகை ஷாமிலி பற்றி அவதூறு தகவல்களும் புகைப்படங்களும் பரப்பட்டுவருகிறது.

இதுகுறித்து அறிந்த நடிகை ஷாமிலி, தனது பெயரில் இன்ஸ்டாவில் கணக்குத் தொடங்கி அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் சினிமாவட்டாரத்தில் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.