1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (09:50 IST)

சசிக்குமாரை இயக்கப்போகும் க பெ ரணசிங்கம் இயக்குனர்! விரைவில் அறிவிப்பு!

க பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் புதிய படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு கவனம் விழுந்து பரவலாக பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் இயக்குனர் விருமாண்டி. இப்போது கதையை எழுதி முடித்துள்ள அவர் நடிகர் சசிகுமாருக்கு கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்திலும் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷே நடிப்பார் என சொல்லப்படுகிறது.