வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:38 IST)

அடுத்தடுத்து பீரியட் படங்களில் நடிக்கும் சசிக்குமார்!

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் விருமாண்டி இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் 1975 ஆம் ஆண்டுகளில் நடப்பது போன்ற கதையாம்.

சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு கவனம் விழுந்து பரவலாக பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் இயக்குனர் விருமாண்டி. இப்போது கதையை எழுதி முடித்துள்ள அவர் நடிகர் சசிகுமாருக்கு கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்திலும் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷே நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த படம் 1970 களில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் அனீஸ் இயக்கும் படத்திலும் சசிக்குமார் இதே போல 1980 களில் நடக்கும் கதையில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.