1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (12:27 IST)

தளபதி விஜய் ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! #Thalapathi63

ஏஜிஎஸ் புரொடக்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார்.




இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், விவேக் உள்பட பலர் நடிக்கிறார்கள்.  இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். 
 
இந்நிலையில் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னிமில்லில நடக்கிறது. இதற்காக வந்து சென்ற தளபதி விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது விஜய் காரை விட்டு எழுந்து சிரித்த படி ரசிகர்கள் மத்தியில் டாடா காட்டி விட்டு சென்றார் . விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.