புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (17:55 IST)

"தளபதி 63" கதை திருட்டு புகார்.! சம்மந்தப்பட்டவரை சமரசப்படுத்திய அட்லீ!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தும், விஜய் படங்கள் என்றாலே ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது. "தலைவா படம் தொடங்கி இறுதியாக வெளியான சர்கார்" படம் வரை விஜய் படங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இன்னும் அட்லீ கூட்டணி என்றால் சொல்லவா வேண்டும்! தற்போது உருவாகிவரும் தளபதி 63 படமும் கதை திருட்டு பிரச்சனையை சந்தித்துள்ளது. 
 


 
வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காபி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று கோபி செல்வா குறும்பட இயக்குனர் ஒருவர் அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 


 
இந்நிலையில் தற்போது  கோபி செல்வா என்ற குறும்பட இயக்குனர் ஒருவர், பெண்கள் கால்பந்து  விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும் படத்தை மையமாக வைத்து தான் விஜய் 63வது படத்தின் கதையை  இயக்குனர் அட்லி ரெடி பண்ணியிருப்பதாக புகார் கூறி வருகிறார்.  மேலும் கூறிய அவர்,  நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்கவுள்ளார் என்ற  செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். 


 
எனவே இது தொடர்பாக அட்லீ மற்றும் தளபதி 63 பட குழுவிடம் பேசிய போது அவர்கள், உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.  இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் நான் புகார் அளித்தேன்.  அச்சங்கத்தின் விதிகளின்படி சங்க உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை நிராகரித்தனர் . இதனால் நான் மீண்டும் நீதி மன்றத்தை நாடினேன் . பிறகு இந்த விசாரணை 23 ஆம் தேதி வருகிறது என்று கூறியுள்ளார்.