வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (15:12 IST)

"தளபதி 63" ஃபர்ஸ்ட் லுக் இந்த தேதியிலா? கசிந்த தகவல்! குதூகலத்தில் ரசிகர்கள்.!

தளபதி 63 படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய தகவல் நம்பத்தகுந்த இடத்திலிருந்து  கசித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. 
 
படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று பபிடிப்பு தளங்களிலிருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கங்களை உற்சாகப்படுத்தியதையடுத்து தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 
அதாவது, விஜய் பிறந்தநாள் அன்று  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி பர்ஸ்ட் லுக் போஸ்டர் தயாராக இருக்கிறது என்றும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல இப்படத்தின் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா கல்பாத்தி 11 புள்ளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள்  பர்ஸ்ட் லுக் போஸ்டர் 11 ஆம் தேதி வெளியாகுமா?என்று விடாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.