நீ மக்கள விரும்புனா.. மக்களும் உன்ன விரும்புவாங்க! – வெளியானது தலைவி ட்ரெய்லர்!
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள நீண்ட கால எதிர்பார்ப்பில் இருந்த தலைவி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவின் பெயர் ஜெயா என சுருக்கி அழைக்கப்பட்டாலும் சினிமா முதல் அரசியல் வரையிலான முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.