அஜித்தின் ''துணிவு'' பட டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா?
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில், அஜித்குமார், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் படம் துணிவு. ஜிப்டான் இசையமைத்து வருகிறார்.
ஆக்டன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட்புரடெக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பொங்கல் என படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து, விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Edited by Sinoj