புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 5 மார்ச் 2020 (17:14 IST)

அண்ணாத்த ரஜினிக்கு வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்..!

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், , சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடைப்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட படபிடிப்பு வட இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கிடையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா அபாயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமோஜிராவ் திரைப்பட நகரிலேயே தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில் சற்றுமுன் அண்ணாத்த படத்தின் அட்டகாசமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகரான கோபிசந்த் நடிக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இவர் ஜெயம் ரவியின் அறிமுக படமான ஜெயம் படத்தில் வெறித்தனமான வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து ரஜினி வில்லனாக அண்ணாத்த படத்தில் நடிக்கவுள்ளார். எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.