செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (11:38 IST)

ஓடிடினாலே மொக்கைப் படங்கள்தானா? ரசிகர்களை ஏமாற்றிய டெடி!

ஆர்யா மற்றும் சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவான டெடி திரைப்படம்ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிவராத்திரி அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. சிவராத்திரி அன்று விழித்திருந்தால் கைலாசம் செல்லலாம் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் பலரும் தூங்காமல் இருப்பதற்காக இந்த படத்தை பார்க்க ஆரம்பிக்க ஆரம்பித்த உடனே தூக்கம் வந்து தாங்கள் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு பறிபோனதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

படத்தில் எந்தவொரு இடத்திலும் சுவாரஸ்யம் என்பதே துளியும் இல்லை என புலம்பும் ரசிகர்கள், ஓடிடி யில் ரிலிஸாகும் எல்லா படங்களும் ஏன் இப்படி மொக்கையாக இருக்கின்றன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னதாக பொன்மகள் வந்தாள், பெண்குயின், சைலன்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடைய வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.