செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (15:05 IST)

சிவகார்த்திகேயனோடு மோதும் ஆர்யாவின் பேய் திரைப்படம்!

ரம்சான் பண்டிகையை ஒட்டி டாக்டர் திரைப்படம் மே 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் அந்த படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகளவிலான பணப்புழக்கத்தை செய்வது சிரமமான காரியமாக இருக்குமாம். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய உரிய ஆவணங்கள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படத்தை ரம்ஜான் விடுமுறையைக் கணக்கில் கொண்டு மே 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படமும் ரம்ஜான் ரிலீஸை நோக்கிப் பரபரப்பாக பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாம்.