செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:55 IST)

நடிகருக்கு கண்ணீர் அஞ்சலி...சித்தார்த் வேதனை

தமிழ் ஹீரோ சித்தார்த் இறந்துவிட்டதாக தவறுதலாக வெளியான செய்தியை பார்த்த  நடிகர் சித்தார்த், நாம் எவ்வளவு தரம்தாழ்ந்துவிட்டோம் என டூவிட் பதிவிட்டுள்ளார்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னரும் பாலிவுட் நடிகருமான சித்தார்த்தா என்பவர் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதற்கு சல்மான்கான், பூஜா ஹேக்டே உட்பட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் உள்ள ஒரு சிலர் பாய்ஸ் பட நடிகர்  சித்தார்த் இறந்துவிட்டதாக பதிவு செய்து அவருடைய புகைப்படத்தையும் பதிவு செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தார்த், ‘நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று ஏற்கனவே இதே போல் நிறைய நடந்து விட்டது என்றும் என் மீது வேண்டுமென்றே வெறுப்பை கக்குகிறார்கள். இது என் மீது குறிவைத்து நடத்தப்படுகிறது. அந்த அளவுக்கு நாம் தரம் தாழ்ந்துவிட்டோம் என வேதனை தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  
 இது இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.