1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (03:11 IST)

தமிழ் ராக்கர்ஸ் ஓனருக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்குது போல!

ஆயிரக்கணக்கான கோடிகள் வருடந்தோறும் புழங்கி வரும் தமிழ் திரையுலகை ஒரே ஒரு இணையதளம் ஆட்டிப்படைக்கின்றது என்றால் அது தமிழ் ராக்கர்ஸ் இணையதளமாகத்தான் இருக்கக்கூடும். தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை பிடிக்க எடுத்த பல முயற்சிகள் தோல்வியே அடைந்தன

இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர், வீடியோ ஒன்றில் தயவுசெய்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தங்களது படத்தை நீக்கிவிடுங்கள் என்றும், 30 நாட்கள் கழித்து தாராளமாக அப்லோட் செய்து கொள்ளுங்கள் என்றும் கெஞ்சி கேட்டுக்கொண்டார்

இதற்கு மதிப்பு கொடுத்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தற்போது 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தனது இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது. தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கின்றது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.