திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (11:56 IST)

தமிழ் ராக்கர்ஸ் மூலம் எங்கள் படத்தை பார்க்கலாம்: கார்த்தி பேச்சு

எச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டைப் பெற்ற படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தமிழ் ராக்கர்ஸில் கூட பாருங்கள். ஆனால், அதற்கு ஈடாக யாருக்காவது எங்கள் பெயரைச் சொல்லி உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.
 
காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டினார்கள். முக்கியமாக அந்த வழக்கில் சம்பந்தபட்ட ஒரு உயரதிகாரி படம் பார்க்கும் போது மிக நெகிழ்சியாக இருந்தது என படக்குழுவினர் அனைவரையும்  பாராட்டினார். 
 
மக்கள் அனைவரும் திரையரங்கில் வந்து படம் பார்க்க வேண்டும். இயக்குநர் வினோத்தின் முதல் படமே அருமையாக  வந்துள்ளது. தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போதுதான் நாம் ஒரு செயலில் முழுமை அடைகிறோம். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
 
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை எங்கள் பகுதியில் பார்க்க முடியவில்லை என ஒருவர் கூறியதற்கு, கார்த்தி 'தமிழ் ராக்கர்ஸ்' உள்ளிட்ட பைரசி சைட்டுகளில் படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படவேண்டும். நல்ல படத்தைப்  பார்த்தால் அதற்கான பணத்தை எங்கள் பெயரைச் சொல்லி யாருக்காவது தானமாகக் கொடுத்து விடுங்கள்' என்று பேசியுள்ளார்.