புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (21:41 IST)

தமிழ்கன் அட்மின் அதிரடி கைது

சினிமா துறையினர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டி கொண்டிருந்த தமிழ்கன்  இணையதளத்தின் அட்மின் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
தமிழ்கன்  அட்மின் மற்றும் ஒரு தொழிலாளி கைது செய்யப்பட்டு தற்போது திருவல்லிக்கேணி D1 காவல்நிலையத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து மேலும் சில தகவல்கள் விரைவில் தெரியவரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழ்கன்   இணையதளத்தை ஒழித்து கட்டுவேன் என்று விஷால் ஏற்கனவெ சவால் விட்ட நிலையில் அவர் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கையில் தமிழ்கன்   அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது