1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (22:37 IST)

பதவிக்கு வந்ததால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம்: விஷால்

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய பணிகளுக்கு இடையே விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படம் குறித்தும் இந்த படம் தன்னுடைய திரையுலக வாழ்வில் ஒரு மறக்க முடியாத படம் என்றும் விஷால் கூறியுள்ளார்



 
 
ஷெர்லாக் ஹோல்ம்ஸ், ஜெய்சங்கர் பாணியில் இந்த படம் ஒரு துப்பறியும் படம் என்று கூறிய விஷால், முதலில் தான் நடித்த ஒரு படம் பாடல்கள் இல்லாமல் வெளிவருகிறது என்றும் கூறினார்.
 
மேலும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய பணிகள் காரணமாக இந்த படத்தின் பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறிய விஷால், திரையுலகிற்கு உழைக்காமல் இருந்திருந்தால் பல படங்களில் நடித்து 20 கோடிக்கு மேல் சம்பாத்திருப்பேன். என்றும் ஆனாலும் கோடிகளை எப்போது வேண்டுமானாலும் தன்னால் சம்பாதிக்க முடியும் என்றும் திரையுலகம் தான் எனக்கு மிகவும் முக்கியம்' என்றும் விஷால் கூறியுள்ளார்