தேசிய விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ப் படங்கள்… ரசிகர்கள் அதிருப்தி!
2021 ஆம் ஆண்டுக்கான 69 ஆவது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் இடம்பெற்று இருந்தன. ஆனால் ஒருசில படங்களை தவிர மற்ற படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.
தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை மற்றும் கர்ணன் ஆகிய படங்களுக்கு எந்தவொரு பிரிவிலும் விருதுகள் வழங்கப்படவில்லை. மாறாக மாஸ் மசாலா படங்களான ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா ஆகிய படங்களுக்கு பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆறுதலாக தமிழில் கடைசி விவசாயி திரைப்படத்துக்கு இரண்டு விருதுகளும், தமிழில் உருவாக்கப்பட்ட இரு ஆவணப்படங்களான கருவறை மற்றும் சிறபங்களின் சிற்பங்கள் ஆகியவற்றுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.