வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (20:15 IST)

எல்லா விவரங்களும் எனக்கு வேண்டும்: டி ராஜேந்தர் திடீர் போர்க்கொடி

சமீபத்தில் முடிவடைந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி ராஜேந்தர் அணி தோல்வி அடைந்தது என்பதும் முரளி ராமசாமியின் அணி வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் டி ராஜேந்தர் திடீரென அந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் அளித்துள்ளார். மாலை 3 மணி வரை 740 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாகவும் ஆனால் 40 நிமிடத்தில் 300 வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அந்த வாக்குகள் அனைத்தும் கள்ள வாக்குகளாக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார் 
 
எனவே தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் ஓட்டு போட்டவர்களின் முழு விவரங்கள் தங்களுக்கு வேண்டுமென்றும் டி ராஜேந்தர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது