வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:34 IST)

நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தேர்தலில் போட்டி..??

கடந்த 22 ஆம் தேதி சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 23 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் டி.ரஜேந்தர் ஆகியோர் தயாரிப்பாளர் தலைவர் பதவிக்குப்  போட்டியிட்டனர்.

இதில்,டி.ராஜேந்தர் தோல்வி அடைந்ததாகவும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொத்த டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சூழ்ச்சி செய்துள்ளனர். இதில் சுமார் 250 கள்ள ஓட்டுகள் பதிவாகியுள்ளது. தமிழக அரசியலில் நிற்கவேண்டி ஒரு பயிற்சி தந்திருக்கிறான் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதுபோல் அடுத்தவருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம் கட்சி போட்டியிடும் என தெரிகிறது.