பாமகவில் இருந்து திமுகவிற்கு ஜம்ப்!!

Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 24 நவம்பர் 2020 (14:46 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாமகவில் இருந்து விலகி சிலர் திமுகவில் இணைந்தனர். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இவரை தொடர்ந்து அடுத்து ஸ்டாலினும் தனது பிரச்சாரத்தை துவங்க உள்ளார். 
 
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாமகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆகியோர் உடன் இருந்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :