திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:43 IST)

சுஷாந்த் உயிரோடு இருந்திருந்தால் சிறையில் இருந்திருப்பார் - காதலி ரியா அதிரடி

சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் ஜூன் மாதம் 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதில் குறிப்பாக சுஷாந்த்திற்கு அவரது காதலி ரியா போதை பொருள் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 9 ம் தேதி மும்பை சிறையில் ரியா  அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியில் வர இரண்டு முறை முயற்சித்தும் அது முடியவில்லை.

இந்நிலையில் ரியா தன்னுடைய ஜாமின் மனுவில் இறந்த சுஷாந்த் குறித்து அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, போதை பழக்கத்தை தக்க வைத்துக்கொள்ள தன்னுடைய வேலையாட்கள் மற்றும் நெருக்கமானவர்களை உபயோகித்துக்கொண்ட சுஷாந்த் இன்று உயிரோடு இருந்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்திருப்பார் என அதிரடியாக கூறியுள்ளார்.