திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (18:08 IST)

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் தேடிய வார்த்தைகள் இதுதான்..!

சீரியலில் இருந்து படங்களில் நடிக்க துவங்கிய சுஷாந்த் சிங் கடண்டஹ் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அந்தவகையில் தற்ப்போது சுஷாந்த் இறப்பதற்கு முன்னர் கடைசியாக கூகுளில் தேடிய வார்த்தைகளை மும்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் முதலில், "தன்னை பற்றி என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ளன என்று தேடியிருக்கிறார். பின்னர்,  வலியில்லா மரணம் (Painless Death) , இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு ( Bipolar Disorder) மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளை கடைசியாக சுஷாந்த் கூகுளில் தேடியுள்ளதாக மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், கூறிய அவர், சுஷாந்த் தரக்கொலை குறித்து இதுவரை  56 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும்,அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் 2 முறை வாக்குமூலம் பெற்று பல கோணங்களில் விசாரித்து வருவதாகவும்  காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.