வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:37 IST)

நீண்ட இடைவெளிக்கு பின் கிராமத்து கதையில் சிம்பு: இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியல் தற்போது சுசீந்திரன் இணைந்துள்ளார். சுசீந்திரன் சமீபத்தில் சிம்புவை சந்தித்து ஒரு கதையை கூறியதாகவும் இந்த கதை சிம்புவுக்கு பிடித்து விட்டதை அடுத்து தயாரிப்பாளரிடம் சென்று கதை கேட்டு படத்தை உறுதிசெய்யவும் என்று சிம்பு கூறியதாகவும் சுசீந்திரன் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றும் ஹரியின் ’கோவில்’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிராமத்து கதையில் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் நடைபெறும் என்று தெரிகிறது மேலும் இந்த படத்தை இப்போதைக்கு தயாரிப்பதில் டபுள் மீனிங் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிறுவனமே இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் கூறப்படுகிறது